×

தமிழகத்தில் மேலும் கூடுதலாக 3 சிறப்பு ரயில்கள் இயக்கம் தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:  தஞ்சாவூர்-சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயில் (06866) வரும் 26ம் தேதி முதல் தினமும் இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.30 மணிக்கு எழும்பூர் ரயில்நிலையம் வந்தடையும். மறுமார்க்கமாக எழும்பூர்- தஞ்சாவூர் இடையே சிறப்பு ரயில் (06865) வரும் 27ம் தேதி முதல் தினமும் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 10.55 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூருக்கு காலை 6 மணிக்கு சென்றடையும்.
 எழும்பூர்-கொல்லம் இடையே சிறப்பு ரயில் (06101) வரும் 25ம் தேதி முதல் தினமும் மாலை 5 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு கொல்லத்திற்கு காலை 8.45 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கமாக கொல்லம்- எழும்பூர் இடையே சிறப்பு ரயில் (06102) வரும் 26ம் தேதி முதல் மதியம் 12 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் ரயில்நிலையத்திற்கு மறுநாள் காலை 3.05 மணிக்கு வந்தடையும்.  

மேலும் எழும்பூர்-திருச்சி இடையே சிறப்பு ரயில் (02653) வரும் 27ம் தேதி முதல் தினமும் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.45 மணிக்கு திருச்சிக்கு சென்றடையும். மறுமார்க்கமாக திருச்சி-எழும்பூர் இடையே சிறப்பு ரயில் (02654) வரும் 26ம் தேதி முதல் இரவு 10.45 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில்நிலையத்திற்கு வந்தடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கப்படும்.


Tags : Southern Railway ,Tamil Nadu , Southern Railway announces operation of 3 more special trains in Tamil Nadu
× RELATED நிவர் புயல் காரணமாக ரத்து செய்யப்பட்ட...