×

தமிழகத்தில் மேலும் 3,057 பேருக்கு கொரோனா...இறப்பு விகிதம் குறைந்து, குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் மேலும் 3,057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 7,03,250-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,  

* தமிழகத்தில் மேலும் 3,057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 7,03,250 -ஆக அதிகரித்துள்ளது.

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 6,59,432 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 4,262 பேர் குணமடைந்துள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 33 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 10,858 ஆக உயர்ந்துள்ளது.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 844 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 1,94,139 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை 93,56,580 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 81,472 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 197 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 34,198
 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 4,24,529  பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 1,829 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 2,78,689 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும்  1,239 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை மொத்தம் 32 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்படவில்லை.

* வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 6,711 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags : Corona ,Tamil Nadu ,survivors , Corona for another 3,057 people in Tamil Nadu ... Decrease in death rate and increase in number of survivors
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து