×

கவர்னர் மாளிகை முன் நாளை போராட்டம் திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுகவினர் திரளாக பங்கேற்பீர் : ஆவடி சா.மு.நாசர் வேண்டுகோள்

திருவள்ளூர்: திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவடி சா.மு.நாசர் வெளியிட்டுள்ள அறிக்கை:அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் சேர 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு இனியும் கால அவகாசம் கோராமல், உடனடியாக கவர்னர் ஒப்புதல் அளிக்க கோரியும், அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்க தவறிய அதிமுகவின் எடப்பாடி அரசை கண்டித்தும் மாணவர் நலனையும், சட்டமன்ற மாண்பையும் பாதுகாக்கும் பொருட்டு நாளை (24ம் தேதி) காலை 9 மணியளவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கவர்னர் மாளிகை முன்பு போராட்டம் நடைபெறுகிறது.

இதில், திருவள்ளூர் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கிளை, வார்டு, வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

Tags : protest ,Tiruvallur South District DMK ,Governor's House , Tomorrow's protest in front of the Governor's House in the southern district of Tiruvallur DMK will participate en masse : Request by Avadi S.M.Nasser
× RELATED வேல் யாத்திரைக்கு தடை கோரி எஸ்பி...