×

இல்லாத ஊசிக்கு பொல்லாத வாக்குறுதிகள்: பாஜகவின் தேர்தல் அறிக்கை குறித்து நடிகர் கமல் விமர்சனம்

சென்னை: நாங்களே வந்தால் தடுப்பூசி என்கிறார் இவர்; எங்களோடு வந்தால் தடுப்பூசி என்கிறார் அவர்; இல்லாத ஊசிக்கு பொல்லாத வாக்குறுதிகள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஐயா ஆட்சியாளர்களே, தடுப்பூசி என்பது உயிர்காக்கும் மருந்து. மருந்து என்பது அள்ளித்தெளிக்கும் வாக்குறுதி அல்ல; மக்களின் ஏழ்மையுடன் விளையாகி பழகிவிட்டீர்கள். மக்கள் உயிருடன் விளையாட துணிந்தால் உங்கள் அரசியல் ஆயுள் மக்களால் தீர்மானிக்கப்படும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜகவின் தேர்தல் அறிக்கையை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அதில் பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றால், அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும். பீகாரின் நகர் மற்றும் கிராமங்களில் 2022ம் ஆண்டுக்குள் 30 லட்சம் மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். பீகாரில் மருத்துவம் பொறியியல் படிப்புகள் இந்தி மொழியில் கற்பிக்கப்படும். புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இல்லாத ஊசிக்கு பொல்லாத வாக்குறுதிகள் என்று பாஜகவின் தேர்தல் அறிக்கை குறித்து கமல்ஹாசன் இன்று விமர்சனம் செய்துள்ளார்.

Tags : Kamal ,BJP , Actor, Kamal, Criticism, BJP, Election Report
× RELATED பத்து வருஷத்துல ஒன்னும் நடக்கல…...