ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே நீரில் கார் மூழ்கி தந்தை - மகள் உயிரிழப்பு!: உடலை தேடும் பணி தீவிரம்

ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே தரைப்பாலத்தில் கார் அடித்து செல்லப்பட்டதில் தந்தை - மகள் உயிரிழந்தனர். ஜி.டி. நெல்லூர் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் முழுவதும் நீர் சென்றது. கார் வெள்ள நீரில் சிக்கி அடித்து செல்லப்பட்டதில் ஓட்டுனரும், பிரசாத் என்பவரின் மனைவியும் உயிர் தப்பினர். காரில் சடலமாக மகள் வினோதா உடல் மீட்கப்பட்டது. பிரசாத்தின் உடலை மீட்பு படையினர் தேடி வருகின்றனர.

Related Stories:

>