×

நடிகர் சூரியின் ரூ.2.70 கோடி மோசடி புகார் - ரமேஷ் குடவாலா முன்ஜாமீன் மனு

சென்னை: நடிகர் சூரியின் ரூ.2.70 கோடி மோசடி புகாரில் ரமேஷ் குடவாலா உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையான ரமேஷ் குடவாலா முன்ஜாமீன் மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது. சூரியிடம் போலீஸ் விசாரணை நடத்திய நிலையில் முன்ஜாமீன் கோரி ரமேஷ் குடவாலா மனுதாக்கல் செய்துள்ளார்.

சிறுசேரியில் நிலம் வாங்கி தருவதாக ரூ.2.70 கோடி மோசடி செய்ததாக நடிகர் சூரி புகார் அளித்திருந்தார். முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா, படத்தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மீதான புகார் பற்றி போலீஸ் விசாரணை நடத்துகின்றனர்.

ரமேஷ் குடவாலா காவல் அதிகாரியாக இருந்த போது நிலப்பிரச்சனை என்று புகார் வந்த நபரிடம் 2.50 கோடிக்கு நிலத்தை வாங்கி கொள்வதாக ஒப்பந்தம் செய்துள்ளார். ஆனால் அதை மறைத்து 5.25 கோடிக்கு வாங்கியதாக ஆவணங்கள் ஏற்பாடு செய்து அதற்கு ஏற்றவாறு ஊர் தலைவரிடம் போலி சான்றிதழ் உருவாக்கி நடிகர் சூரியை ஏமாற்றி இருப்பதாக தெரிகிறது. நடிகர் சூரி பணத்தை திருப்பி கேட்கும் போது 40 லட்சம் மட்டும் கொடுத்து விட்டு 2018ம் ஆண்டு ஜூன் மாதம் மீதி தொகையான 2.70 கோடி தருவதாக கூறி ஒப்பந்தம் போட்டனர். ஆனால் இரண்டு ஆண்டுகளாகியும் தராததால் 2018-ம் ஆண்டு அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் சூரி புகாரின் பேரில் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

ரமேஷ் குடவாலா முன்னாள் டிஜிபியாக இருப்பதால் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடிகர் சூரி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் முன்னாள் டிஜிபியாக இருந்த ரமேஷ் குடவாலா ஏமாற்றியதும், நடிகர் விஷ்ணு வங்கி கணக்கில் இருந்து பணம் நடிகர் சூரிக்கு கொடுக்கப்பட்டது தொடர்பான ஆவணங்கள் வைத்து வாதங்களை நடிகர் சூரி தரப்பில் முன்வைத்தனர்.இதனை ஏற்று கொண்ட சைதாப்பேட்டை நீதிமன்றம் முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா மற்றும் அன்புவேல் ராஜன் மீது வழக்கு பதிவு செய்யுமாறு கடந்த மாதம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் சூரி கடந்த 1-ம் தேதி புகார் அளித்தார். இது தொடர்பாக அடையாறு போலீசார் முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா, திரைபட தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் ஆகிய இருவர் மீதும் 406-நம்பிக்கை மோசடி, 420- பண மோசடி, 465- பொய்யான ஆவணத்தை தயாரித்தல், 468- ஏமாற்றுவதற்காக பொய்யான ஆவணத்தை தயாரித்தல், 471- பொய்யானதை உண்ணமை என நம்ப வைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் அடையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.அதன் பின் 50 லட்ச ரூபாய்க்கு மேல் மோசடி இருப்பதால் வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட உள்ளது. சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட பிறகு முதற்கட்ட விசாரணையை நடிகர் சூரியிடம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நில மோசடி விவகாரத்தில் போலியாக ஆவணம் உருவாக்கி கோடிக்கணக்கில் முன்னாள் டிஜிபியே ஈடுபட்டது காவல்துறை மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Suri ,Ramesh Kudawala , Actor Soori, Complainant, Ramesh Kudawala, Pre-Bail
× RELATED கொட்டுக்காளி படத்துக்காக சூரி குரலை மாற்றிய மர்மம்