×

தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று புறநகர் மின்சார ரயில்களை இயக்க உடனடியாக உத்தரவிடுக: எம்.பி. சு.வெங்கடேசன் கோரிக்கை

சென்னை: தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று புறநகர் மின்சார ரயில்களை இயக்க உடனடியாக உத்தரவிடுக என ரயில்வே அமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார். செப்டம்பர் 2ம் தேதியே சென்னையில் புறநகர் மின்சார ரயிலை இயக்க அனுமதி கோரி முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். ரயில்வே அமைச்சகம் இன்னமும் மின்சார ரயில்களை இயக்க அனுமதி வழங்காதது ஆச்சரியமளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 2 மாதமாக ரயில்வே அமைச்சகம் முடிவு எடுக்காதது பற்றி மக்களுக்கு விளக்க வேண்டும் எனவும் சு.வெங்கடேசன் கேட்டுக் கொண்டுள்ளார்.


Tags : S. Venkatesh ,Chief Minister ,Tamil Nadu , Suburban electric train, order to run, MP. S. Venkatesh
× RELATED தமிழக எம்.பி.க்களுக்கு இந்தி மொழியில்...