×

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூரில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. வட தமிழகம், கடலோர தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்குவங்கம் மற்றும் வங்கதேச கடற்கரை அருகே இன்று கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு இந்தியாவில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு மத்திய வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக, ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு இந்தியாவில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை நிலவரப்படி மேற்குவங்கம் - வங்கதேச கடற்பகுதிக்கு வட மேற்கே நிலை கொண்டுள்ளது. இதுமேலும் நகர்ந்து மேற்குவங்கம் மற்றும் வங்கதேச கடற்கரையையொட்டி சுந்தர வனக் காடுகள் அருகே இன்று கரையை கடக்கக்கூடும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் போது அசாம் மற்றும் மேகாலயா மாநிலங்களில் சில பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Tags : Kallakurichi ,Villupuram ,Cuddalore ,Chennai Meteorological Center , Weather center, heavy rain
× RELATED முகூர்த்த தினம், வார இறுதிநாள்...