×

அறந்தாங்கி அருகே மயானத்திற்கு சாலை வசதியின்றி இறந்தவரின் சடலத்தை வயலுக்குள் இறங்கி தூக்கி செல்லும் அவலம்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அறந்தாங்கி : புதுக் கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் கீழ்க்குடிஅம்மன்ஜாக்கி ஊராட்சியைச் சேர்ந்தது கீழ்க்குடி கிராமம். இக்கிராமத்தில் ஏராளமானவர்கள் வசி த்து வருகின்றனர். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்தால், அவர்களை தகனம் செய்வதற்காக ஊரில் இருந்து சுமார் 2 கி.மீ தூரத்தில் வயல் வெளியில் உள்ள சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

கோடை காலத்தில் யாராவது இறந்துவிட்டால், சடலங்களை மயானத்திற்கு கொண்டு சென்று தகனம் செய்வதில் எந்த சிரமமும் இல்லாமல் இருக்கும். ஆனால் வயல்களில் நெல் சாகுபடி செய்துள்ள காலங்களில் கீழ்க்குடியில் இறந்தவர்களின் சடலங்களை வயல்களில் பயிர்களை மிதித்துக் கொண்டு சுமார் ஒரு கி.மீ தூரம் சுமந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. நேற்று கீழ்க்குடியில் இறந்த 15 வயதுடைய ஒரு சிறுவனின் சடலத்தை அவரது உறவினர்கள் சுமார் ஒரு கி.மீ தூரத்திற்கு வயல்களில் பயிர்களை மிதித்தவாறே மயானத்திற்கு தூக்கிச் சென்றனர்.இவ்வாறு வயல்களில் சடலத்தைதூக்கிச் செல்லும்போது, பயிர்கள் சேதமடைவதால், விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறியது:கீழ்க்குடி கிராமத்தை சேர்ந்தவர்கள் இறந்துவிட்டால், கிராமத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தூரத்தில் வயல் வெளியில் உள்ள மயானத்தில் தான் தகனம் செய்வது வழக்கம். அதன்படி கோடை காலத்தில் சடலத்தை கொண்டு சென்று தகனம் செய்வதில் சிரமம் ஏதும் இருக்காது. ஆனால் வயல்களில் நெல் சாகுபடி செய்யும் காலங்களில் யாராவது இறந்துவிட்டால், நாங்கள் வயல்களில் பயிர்களை சேதப்படுத்தியபடியே சடலங்களை மயானத்திற்கு கொண்டு செல்லவேண்டி உள்ளது.

இதுதொடர்பாக நாங்கள் கீழ்க்குடி மயானத்திற்கு சாலை அமைத்து தரக் கோரி, அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலர்களிடம் பலமுறை கூறியும் அவர்கள் சாலை அமைத்து தர முன்வரவில்லை. இதனால் நாங்கள் தற்போது கூட சடலத்தை பயிர்களை சேதப்படுத்தியபடியே மயானத்திற்கு கொண்டு செல்ல வேண்டி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, கீழ்க்குடி மயானத்திற்கு சடலங்களை கொண்டு செல்வதற்கு சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

Tags : deceased ,field ,cemetery ,Aranthangi , Aranthangi: Pudukkottai District Aranthangi Panchayat Union The village belongs to the Lower Kudiammanjaki Panchayat.
× RELATED மாரநேரி கிராமத்தில் உழவர் வயல் தினவிழா