×

மழையால் பாதிக்கப்பட்ட தெலங்கானா மாநில மக்களுக்கு ரூ.3.30 கோடி மதிப்பிலான 1 லட்சம் பெட்ஷீட்களை அனுப்பி வைத்தார் அமைச்சர் செங்கோட்டையன்!!

ஈரோடு, :மழையால் பாதிக்கப்பட்ட தெலங்கான மாநில மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் வகையில் ரூ.3.30 கோடி மதிப்பிலான 1 லட்சம் பெட்சீட்களை அமைச்சர் செங்கோட்டையன் இன்று காலை அனுப்பி வைத்தார்.ஈரோடு மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் தெலங்கானா மாநிலத்துக்கு ரூ.3.30 கோடி மதிப்பிலான 1 லட்சம் பெட்சீட்கள் இன்று காலை ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 6 லாரிகளில் அனுப்பும் பணி நடந்தது. தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு லாரிகளை வழியனுப்பி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது;

தெலங்கானா மாநிலத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதை அடுத்து ஈரோடு மாவட்டத்தில் இருந்து ரூ.3.30 கோடி மதிப்பிலான 1 லட்சம் பெட்சீட்கள் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு 7 ஆண்டுகளுக்கு சான்றிதழ் நீட்டிக்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி இருந்தார். இதன் அடிப்படையில் ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழை ஆயுள் காலம் முழுவதும் நீடித்து மத்திய அரசு உத்தவிட்டுள்ளது. நீட் தேர்வு விஷயத்தில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் விரைவில் நல்ல முடிவுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார். இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்.

Tags : Senkottayan ,Telangana , Rain, Telangana, State People, Bedsheets, Minister Senkottayan
× RELATED காதலனை திருமணம் செய்து கொண்டதால்...