போதிய அளவில் வெங்காயம் இருப்பு இல்லாததால் பசுமை அங்காடியில் வெங்காயம் விற்பனை நிறுத்தம்

சென்னை: போதிய அளவில் வெங்காயம் இருப்பு இல்லாததால் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்த 2 நாட்களில் 20 டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரூ.45க்கு வெங்காயம் விற்பனை செய்யும் திட்டம் நேற்று தொடங்கப்பட்ட நிலையில் மறுநாளே விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

வரத்து குறைவால் பல்லாரி வெங்காயம் விலை ரூ.130க்கு விற்பனையாகிறது. விலை அதிகரிப்பால் கிலோ கணக்கில் வாங்கியவர்கள் கிராமில் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எகிப்து வெங்காயத்தை வாங்க மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். தமிழகத்திற்கு மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மற்றும் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து கடுமையான மழை காரணமாக விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக வெங்காயம் வரத்து குறைய தொடங்கியுள்ளது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சாதாரண நாட்களில் தினமும் 80 லாரிகளில் பெரிய வெங்காயம் வந்து கொண்டிருந்தது. இது தற்போது 40 லாரிகள் அளவுக்கு தான் வந்து கொண்டிருக்கிறது. அதுவும் அதிக அளவில் டேமேஜ் வேறு உள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். வரத்து குறைவால் கடந்த மாதம் ரூ.25, ரூ.30 என்று விற்கப்பட்ட பல்லாரி வெங்காயம், தற்போது கிடுடுவென உயர்ந்து கிலோ ரூ.80, ரூ.90 என்று விற்பனையாகிறது. இதேபோல சின்ன வெங்காயம் ரூ.30க்கு விற்கப்பட்டது தற்போது இது ரூ.90 வரை விற்பனையாகிறது. இது மொத்த மார்க்கெட்டில் தான் இந்த விலை.

இதை வாங்கி விற்கும் சில்லறை வியாபாரிகள் பெரிய வெங்காயத்தை கிலோ ரூ.120, ரூ.130 என்று விற்பனை செய்கின்றனர். அதேபோல சின்ன வெங்காயமும் கிலோ ரூ.130 வரை விற்பனையாகி வருகிறது. முன்னர் பல்லாரி வெங்காயத்தை தேர்வு செய்து எடுக்கலாம். விலை உயர்வால் அவ்வாறு எடுக்க சிலக்கடைக்காரர்கள் தடை விதித்துள்ளனர். சமையலில் வெங்காயம் என்பது முக்கிய இடத்தை பிடித்து வருகிறது. இந்த நிலையில் வெங்காயம் விலை உயர்வை சந்தித்து வருவது பொதுமக்களை கலக்கமடைய செய்துள்ளது. ஏற்கனவே கொரோனா பாதிப்பால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெங்காயம் அறுவடை செய்யும் பகுதிகளில் மழை பெய்வதால் விலை உயர்ந்துள்ளது. இது தற்காலிகமானது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூர் மூலக்குடியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்த அமைச்சர் காமராஜ் பேட்டியளித்துள்ளார். கடந்த 22 நாட்களில் சுமார் 2.85 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது அமைச்சர் காமராஜ் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>