×

இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளில் காற்றின் மாசு மிக மோசமான நிலையில் உள்ளது : ஜோ பைடனுடனான விவாதத்தில் அதிபர் டிரம்ப் பேச்சு!!


வாஷிங்டன்: இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளில் காற்றின் மாசு மிக மோசமான நிலையில் உள்ளது  என்று ஜோ பைடனுடனான இறுதிக்கட்ட விவாதத்தில் பருவநிலை மாற்றம் குறித்து ட்ரம்ப் பேசியுள்ளார். அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபர் பதவிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் 3-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் அதிபர் பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டெனால்டு டிரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர்.
 
அமெரிக்க தேர்தலை பொறுத்தவரை அதிபர், துணை அதிபர் வேட்பாளர்கள் நேருக்கு நேர் சந்தித்து நேரடி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்பது மிகவும் பிரபலமான தேர்தல் பிரசார நடைமுறை ஆகும்.இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையிலான இறுதிக்கட்ட விவாதம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கொரோனா வைரஸ் இத்தேர்தலில் முக்கிய பிரச்சினையாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

 அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்: அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3ம் தேதிக்கு முன் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட வாய்ப்பில்லை.தடுப்பூசி தயாரானதும் ராணுவனத்தின் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும்.

ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் : கொரோனாவை எதிர்த்து போராட டிரம்பிடம் எந்த திட்டமும் இல்லை.அமெரிக்காவில் வரும் மாதங்களில் மேலும் 2 லட்சம் பேர் கொரோனாவால் இறப்பார்கள். அமெரிக்காவில் கொரோனாவால் ஏராளமானோர் இறக்க காரணமான அதிபர் டிரம்ப் பதவியில் நீடிக்கக் கூடாது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் : அமெரிக்காவில் கொரோனாவால் இறப்போர் விகிதம் குறைந்துள்ளது.கொரோனாவில் இருந்து 99% இளைஞர்கள் குணமடைந்துள்ளனர்.

ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் : ஆட்சிக்கு வந்தால் கொரோனா பெருந்தொற்றை முடிவுக்கு கொண்டு வருவோம்.கொரோனா பெருந்தொற்றை கையாள்வதில் டிரம்ப் அரசு படுதோல்வி அடைந்துள்ளது.முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்குவேன்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்: அமெரிக்காவில் கொரோனா இறப்பு விகிதம் குறைந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவ சீனாவே காரணம்.

ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் : சீனாவில் டொனால்ட் ட்ரம்புக்கு ரகசிய வங்கிக்கணக்குகள் உள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்: அதிபராகும் முன்பே தன்னுடைய சீன வங்கக் கணக்கை மூடிவிட்டோம். சீனா, ரஷ்யா, உக்ரைனிடம் இருந்து பணம் எதுவும் பெறவில்லை.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்: வடகொரிய விவகாரத்தை ஒபாமா சிக்கலாக்கி வைத்திருந்தார். வடகொரிய விவகாரத்தில் ஒபாமா செய்ய முடியாததை நாங்கள் செய்தோம்.

ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் : அதிபர் டிரம்ப் தன்னுடைய வரியை கட்டவில்லை.

 அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்: கோடிக்கணக்கில் முன்கூட்டியே வரி செலுத்தி விட்டேன்.

Tags : countries ,India ,Trump ,China ,Russia ,Joe Biden , India, China, Russia, Air Pollution, Joe Biden, President Trump, Speech
× RELATED வெளிநாடுகளில் இருந்து குஜராத்,...