×

பேரழிவு காலத்தில் மருந்தை இலவசமாக கொடுப்பது அரசின் கடமை: மு.க.ஸ்டாலின் கருத்து

சென்னை: திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது: கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதும் தமிழக அரசின் செலவில் இலவசமாக அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று ஏதோ பெரிய சாதனை வாக்குறுதி போல முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பேரழிவு காலத்தில் மக்களைக் காக்கும் மருந்தை இலவசமாகக் கொடுக்க வேண்டியது ஒரு மக்கள் நல அரசின் கடமை. அந்தக் கடமையை ஏதோ மக்களுக்கு, தான் காட்டும் மாபெரும் சலுகையைப் போல பழனிசாமி நினைத்துக் கொள்கிறார். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாய் நிற்கும் மக்களுக்கு 5 ஆயிரம் நிதி உதவி செய்ய மனமில்லாத முதல்வர், இலவசத் தடுப்பூசி என்று அறிவிப்பதன் மூலமாகத் தன்னை தாராளப் பிரபுவாகக் காட்டிக் கொள்ளப் போடும் நாடகத்தைக் காணச் சகிக்கவில்லை. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Tags : state ,MK Stalin ,disaster , It is the duty of the state to provide free medicine in times of disaster: MK Stalin's opinion
× RELATED மக்களவைத் தேர்தல்: கேரள மாநிலம்...