×

வேகத்தை அதிகரித்து, நிறுத்தங்களை குறைத்து 254 பயணிகள் ரயிலை அதிவிரைவு ரயிலாக மாற்ற ரயில்வே வாரியம் அதிரடி திட்டம்: 15% முதல் 25% வரை கட்டணம் உயரும்

சென்னை: நாடு முழுவதும் 200 கிலோ மீட்டருக்கு மேல் இயங்கக் கூடிய பயணிகள் ரயிலின் வேகத்தை அதிகரித்தும், தேவையற்ற நிறுத்தங்களை ரத்து செய்து 254 பயணிகள் ரயில்கள் விரைவு ரயில்களாக இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் கூடுதலாக 15 முதல் 25% வரை கட்டணம் உயர வாய்ப்புள்ளது என்று ரயில்கள் பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். நாடு முழுவதும் உள்ள 17 ரயில்வே மண்டலங்களில் இயங்கும் 508 பயணிகள் ரயிலை விரைவு ரயில்களாக மாற்றி ஜூன் 19ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி 200 கிலோ மீட்டருக்கு மேல் இயங்கக் கூடிய பயணிகள் ரயில்களை அதன் வேகத்தை அதிகரித்து மற்றும் தேவையற்ற நிறுத்தங்களை நீக்கி விரைவு ரயில்களாக இயக்க ரயில்வே மண்டலங்களுக்கு ரயில்வே வாரியம் பரிந்துரை செய்திருந்தது. அதன்படி தெற்கு ரயில்வேயில் 34 ரயில்களை அதன் வேகத்தை அதிகரித்து பயண நேரத்தை குறைத்து புதிய பயண அட்டவணை தயார் செய்யுமாறு தெற்கு ரயில்வே உட்பட அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியம் உத்தரவிட்டிருந்தது.

தமிழகத்தில் நாகர்கோவில்- கோட்டயம் இடையே இயக்கப்படும் ரயில் எண் (56304) இந்த ரயிலின் பயண நேரம் 15 நிமிடங்கள் குறைக்கப்பட்டு (16309) நாகர்கோவில்-கோட்டயம் விரைவு ரயிலாக இயங்கும். அதைப்போன்று நாகர்கோவில்- கோவை-நாகர்கோவில் இடையே இயக்கப்படும் (56319,56320) இந்த ரயிலின் பயண நேரம் 55 நிமிடங்கள் குறைக்கப்பட்டு (16321) நாகர்கோவில்-கோவை விரைவு ரயிலாகவும், மறுமார்க்கத்தில் (56320) கோவை-நாகர்கோவில் பயணிகள் ரயிலின் பயண நேரம் 5 நிமிடங்கள் குறைக்கப்பட்டு (16322) கோவை-நாகர்கோவில் விரைவு ரயிலாக இயங்கும்.

அதைப்போன்று மதுரை-புனலூர்- மதுரை இடையே இயக்கப்படும் (56700,56701) இந்த ரயிலின் பயணநேரம் 50 நிமிடங்கள் குறைகப்பட்டு (16729) மதுரை-புனலூர் விரைவு ரயிலாகவும், மறுமார்க்கத்தில் பயண நேரம் 1 மணி 55 நிமிடங்கள் குறைக்கப்பட்டு (16730) புனலூர்-மதுரை விரைவு ரயிலாகவும் இயங்கும். பாலக்காடு டவுன்- திருச்சி-பாலக்காடு பயணிகள் ரயில் இருமார்க்கத்திலும் 10 நிமிடங்கள் குறைக்கப்பட்டு (16843,16844) பாலக்காடு டவுன்- திருச்சி- பாலக்காடு டவுன் விரைவு ரயிலாக இயக்கப்படும்.

மேலும் பாலக்காடு-திருச்செந்தூர்-பாலக்காடு ரயில் இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டு பாலக்காடு-மதுரை மற்றும் நெல்லை-திருச்செந்தூர் இடையே மட்டும் இயங்கும். மேலும் இரு மார்க்கத்திலும் 35 நிமிடங்கள் பயண நேரம் குறைக்கப்பட்டு பாலக்காடு- பொள்ளாச்சி (56709,56710) இடையே பயணிகள் விரைவு ரயிலாகவும், பொள்ளாச்சி- மதுரை (16731, 16732) இடையே விரைவு ரயிலாகவும் இயங்கும். அதைப்போன்று விழுப்புரம்-மதுரை- விழுப்புரம் இடையே இயக்கப்படும் (56805,56806) விழுப்புரம்- மதுரை இடையே பயண நேரம் 1 மணி 45 நிமிடங்கள் குறைக்கப்பட்டு விழுப்புரம்-விருத்தசாலம் (568050) இடையே பயணிகள் ரயிலாகவும், விருத்தாசலம்- மதுரை (16867) இடையே விரைவு இயங்கும். மறுமார்க்கத்தில் பயண நேரம் 80 நிமிடங்கள் குறைக்கப்பட்டு மதுரை- விருத்தாசலம் ( 16868) இடையே விரைவு ரயிலாகவும், விருத்தாசலம்- விழுப்புரம் (56806) இடையே பயணிகள் ரயிலாகவும் இயக்கப்படும்.

அதைப்போன்று திருச்சி-ராமேஸ்வரம்-திருச்சி ( 56829,56830) இந்த ரயிலின் பயண நேரம் இரு மார்க்கத்திலும் 30 நிமிடங்கள் குறைக்கப்பட்டு (16847,16848) திருச்சி-ராமேஸ்வரம் விரைவு ரயிலாக இயங்கும். மேலும் திருப்பதி- பாண்டிச்சேரி- திருப்பதி (56869,56870) இடையே பயணிகள் ரயில் திருப்பதி- பாண்டிச்சேரி ரயிலின் பயண நேரம் 20 நிமிடங்கள் குறைக்கப்பட்டு (16849) திருப்பதி-பாண்டிச்சேரி விரைவு ரயிலாகவும், மறுமார்க்கத்தில் பயண நேரம் 65 நிமிடங்கள் குறைக்கப்பட்டு (16850) பாண்டிச்சேரி- திருப்பதி விரைவு ரயிலாகவும் இயங்கும்.

மேலும் விழுப்புரம்-திருப்பதி- விழுப்புரம் பயணிகள் ரயில் (56882) விழுப்புரம்-திருப்பதி பயணிகள் ரயிலின் நேரம் 15நிமிடங்கள் குறைக்கப்பட்டு (16853) திருப்பதி விரைவு ரயிலாகவும், ரயில் எண் (56884) விழுப்புரம்-திருப்பதி பயணிகள் ரயிலின் பயண நேரம் 20 நிமிடங்கள் குறைக்கப்பட்டு (16869) திருப்பதி விரைவு ரயிலாகவும் இயங்கும். மேலும் ரயில் எண் (56885) திருப்பதி- விழுப்புரம் பயணிகள் ரயிலின் பயண நேரம் 5 நிமிடங்கள் குறைக்கப்பட்டு (16854) விழுப்புரம் விரைவு ரயிலாக இயங்கும். அதைப்போன்று அரக்கோணம்-சேலம்- அரக்கோணம்(66019, 66020) ரயிலின் பயணநேரம் 45 நிமிடங்களும், சேலம்- அரக்கோணம் ரயிலின் பயண நேரம் 65 நிமிடங்கள் குறைக்கப்பட்டு (16087,16088) அரக்கோணம்- சேலம்-அரக்கோணம் விரைவு ரயிலாக இயங்கும்.

அதைப்போன்று ஈரோடு- மயிலாடுதுறை- நெல்லை பயணிகள் ரயில் தற்போது இந்த ரயில் திண்டுக்கல் ரயில்நிலையத்தில் இரண்டு ரயிலாக பிரிக்கப்பட்டும், இணைக்கப்பட்டும் வருகின்றன. இனி இந்த ரயில்கள் இரண்டு தனி ரயிலாக இயங்கவுள்ளது. அதாவது மயிலாடுதுறை-திண்டுக்கல் விரைவு ரயிலாகவும், ஈரோடு- நெல்லை விரைவு ரயிலாகவும் இயங்கும். மேலும் மயிலாடுதுறை- திண்டுக்கல் ரயில் சேவையின் பயண நேரம் 35 நிமிடங்களும், திண்டுக்கல்-மயிலாடுதுறை சேவையின் பயணநேரம் 40 நிமிடங்களும் குறைக்கப்பட்டு (16859, 16860) மயிலாடுதுறை-திண்டுக்கல்-மயிலாடுதுறை விரைவு ரயிலாக இயங்கும்.

அதேபோல ஈரோடு-நெல்லை ரயிலின் பயண நேரம் 90 நிமிடங்களும், நெல்லை-ஈரோடு ரயிலின் பயண நேரம் 30 நிமிடங்களும் குறைக்கப்பட்டு (16845,16846) ஈரோடு- நெல்லை விரைவு ரயிலாக இயங்கும். அதைப்போன்று தென் மேற்கு ரயில்வே மூலம் இயக்கப்படும் ரயில் (56241, 56242) சேலம்-யஷ்வந்த்பூர்- சேலம் பயணிகள் ரயில் மற்றும் (56513, 56514) காரைக்கால்- பெங்களூரு- காரைக்கால் இடையே இயக்கப்படும் 2 ஜோடி ரயில்களும் விரைவு ரயில்களாக மாற்றப்படவுள்ளன. மேற்க்கண்ட மாற்றங்களை எதிர்வரும் புதிய அட்டவணையில் இருந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு இயக்கப்படும் போது 15% முதல் 25% வரை கட்டணம் உயர்வதற்கு வாய்ப்புள்ளது. புதிய
அட்டவணையில் இருந்து மாற்றங்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு இயக்கப்படும் போது 15% முதல் 25% வரை கட்டணம் உயர்வதற்கு வாய்ப்புள்ளது.

Tags : Railway Board Action Plan to increase speed, reduce stops and convert 254 passenger trains into high speed trains: Fare hike from 15% to 25%
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...