×

தமிழகத்தில் உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் முழு விவரம்: தேர்தல் ஆணையம் வெளியிட்டது

சென்னை: தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களில் இடம்பெறும் சட்டமன்ற தொகுதிகள் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் 32 மாவட்டங்களில் இருந்து 37 மாவட்டங்களாக அதிகரித்துள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு மாவட்டம், வேலூர் மாவட்டத்தில் இருந்து ராணிபேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்கள், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தென்காசி என 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. பழைய மாவட்டங்கள் மற்றும் புதிய மாவட்டங்களில் இடம்பெறும் சட்டமன்ற தொகுதி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
* அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் (தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் இடம்பெறும்.
* செங்கல்பட்டு மாவட்டத்தில் சோளிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, செய்யூர் (தனி), மதுராந்தகம் (தனி) ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள்.
* வேலூர் மாவட்டத்தில் காட்பாடி, வேலூர், அணைக்கட்டு, கீழ்வைத்தினான்குப்பம் (தனி), குடியாத்தம் (தனி) ஆகிய 5 தொகுதிகள்,
* ராணிபேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் (தனி), சோளிங்கர், ராணிபேட்டை, ஆற்காடு ஆகிய 4 தொகுதிகள்.
* திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 4 தொகுதிகள்.
* விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, மைலம், திண்டிவனம் (தனி), வானூர் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர் ஆகிய 7 தொகுதிகள்.
* கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உடுமலைபேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி (தனி) ஆகிய 4 தொகுதிகள்.
* திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 தொகுதிகள்.
* தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் (தனி), வாசுதேவநல்லூர் (தனி), கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகள்.

Tags : constituencies ,districts ,Assembly ,Tamil Nadu ,Election Commission , Full details of Assembly constituencies in 5 districts formed in Tamil Nadu: Published by Election Commission
× RELATED சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்ற...