×

விஜயதசமியில் மாணவர் சேர்க்கை: பள்ளி கல்வித்துறை உத்தரவு

சென்னை: தொடக்க கல்வி இயக்கு நர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் அரசு, அரசு நிதியுதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 26ம் தேதி விஜயதசமி நாளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உரிய ஏற்பாடு செய்ய வேண்டும். அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு பெற்றோர் அறியும் வகையில் பொது இடங்களில் பேனர் வைத்தும், பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் கூட்டங்கள் நடத்தியும் தெரியப்படுத்தி, 5 வயது பூர்த்தியான குழந்தைகளை சேர்க்கவும், அங்கன்வாடியில் 5 வயது நிரம்பிய குழந்தைகளையும் கண்டறிந்து பள்ளிகளில் சேர்க்க வேண்டும்.

Tags : Student Admission in Vijayadasamy: School Education Order
× RELATED குறைக்கப்பட்ட பாடத்திட்டம் 4 நாளில்...