×

அமித்ஷாவுக்கு எடப்பாடி பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: மத்திய அமைச்சர் அமித்ஷாவின் பிறந்தநாளையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வாழ்த்து தெரிவித்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர்கொத்துடன் வாழ்த்துக்கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது: உங்களின் பிறந்தநாளான இன்று எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இந்த நாட்டிற்கு தொடர்ந்து சேவை செய்ய இறைவனை வேண்டிக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். தெலங்கானா கவர்னர் தமிழிசை வாழ்த்து: வளமான, வலிமையான பாரதத்தை உருவாக்க உறுதி கொண்டு பிரதமரோடு தோளோடு தோள் நின்று, தீராத காஷ்மீர் எல்லை பிரச்னை முதல் கன்னியாகுமரி வரை அகண்ட பாரதத்தை அரசியல் சாணக்கியத்துடன் முன்னேற்ற பாதையில் முழு மூச்சுடன் ஈடுபடும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
இவ்வாறு கூறியுள்ளார்.


Tags : Birthday ,Amitsha Edappadi , Happy Birthday to Amit Shah Edappadi
× RELATED உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி