பீகார் துணை முதல்வருக்கு கொரோனா

பீகார் துணை முதல்வரும், பாஜ.வின் மூத்த தலைவருமான  சுஷில் குமார் மோடிக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது.  இது குறித்து டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. லேசாக காய்ச்சல் இருந்ததால் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். தற்போது, உடல்நிலை சீராக இருக்கிறது. சிடி ஸ்கேன் செய்ததில் நுரையீரல் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். விரைவில் குணமடைந்து தேர்தல் பிரசாரத்துக்குத் திரும்புவேன்,’ என கூறியுள்ளார்.

Related Stories:

>