அமித்ஷா பிறந்தநாள் தலைவர்கள் வாழ்த்து

புதுடெல்லி: நேற்று தனது 56வது பிறந்தநாளை கொண்டாடிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தலைவர்கள்  வாழ்த்து கூறியுள்ளனர். நேற்று தனது 56வது பிறந்த நாளைக் கொண்டாடினார் அமித்ஷா. இதை முன்னிட்டு, அவருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘‘பிறந்த நாள் வாழ்த்துகள் அமித்ஷா ஜி. இந்தியாவின் முன்னேற்றத்தில் உங்களின் அர்ப்பணிப்பை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. உங்களால் பாஜ வலிமையானதாகவும், வியப்பூட்டும் வளர்ச்சியையும் பெற்றுள்ளது. இந்தியாவுக்கு சேவையாற்றுவதற்காக இறைவன் உங்களுக்கு நீண்ட ஆரோக்கியமான ஆயுளைத் தந்தருளட்டும்.’ என்று கூறியுள்ளார்.

Related Stories:

>