×

அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு: அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர், சூரப்பாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில், செங்கல்பட்டு புதிய பஸ் நிலையம், பெரியார் சிலை அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம்  நடந்தது. அனைத்து இந்திய இளைஞர் பெருமன்ற செங்கல்பட்டு மாவட்ட  தலைவர்  சேகுவேரா தாஸ் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தேசியகுழு உறுப்பினர் ஜெகதீசன், மாவட்ட செயலாளர் பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசுக்கு  தாரைவார்க்க துடிக்கும் துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும். மருத்துவப்படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அகில இந்திய தொகுப்பில் வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்க வேண்டும். திண்டுக்கல் சிறுமி கலைவாணியின் பாலியல் பலாத்கார  கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷமிட்டனர்.
இதில்  எஸ்.இன்பராஜ், ஜெ.அஜித்குமார், அய்யனார், விக்கி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Demonstration ,All India Youth Congress , Demonstration by All India Youth Congress
× RELATED நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்