×

நகரும் நியாய விலை கடை துவக்கம்

செய்யூர்:  செய்யூர் தாலுகா சூனாம்பேடு ஊராட்சி, வெள்ளங்கொண்ட அகரம் கிராமத்தில் நகரும் நியாயவிலை கடைதுவக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது.
சித்தாமூர் கிழக்கு அதிமுக ஒன்றிய செயலாளர் டாக்டர் பிரவீன்குமார் தலைமை தாங்கினார். சூனாம்பேடு கூட்டுறவு சங்க இயக்குனர்கள் கதிரவன், கோபுராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்க தலைவர் வெங்கடேசன் வரவேற்றார். செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் கலந்து கொண்டு  நகரும் நியாய விலை கடையை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார்.

Tags : Fair Price Shop Launch , Moving Fair Price Shop Launch
× RELATED படுக்கையில் இறந்து கிடந்த 2 வாலிபர்கள்