×

பஞ்சாயத்து அலுவலகம் இல்லாத மாமண்டூர் ஊராட்சி

மதுராந்தகம்: மாமண்டூர் ஊராட்சியில் பாஞ்சாயத்து அலுவலகம் இல்லாமல் உள்ளது. இதனால், இங்கு உடனடியாக காட்டுவதற்கு, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியம் மாமண்டூர் ஊராட்சியில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சி அதிவேகமாக வளர்ந்து வருகிறது. ஆனால், இங்கு பஞ்சாயத்து அலுவலக கட்டிடம் இல்லை. பல ஆண்டுகளாக செயல்பாட்டு வந்த பஞ்சாயத்து அலுவலகம், தற்போது இடிந்து விழும் நிலையிலும் பயனின்றி கிடக்கிறது. இதனால், ஊராட்சி செயலர் பணிபுரியும் பஞ்சாயத்து அலுவலகம், கடந்த சில ஆண்டுகளாகவே இயங்கவில்லை.

இதையொட்டி, மக்கள் தங்களது குறைகள், தேவைகள் ஆகியவற்றை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உடனடியாக தெரிவிக்க முடியாத நிலை உள்ளது. இதற்காக, மதுராந்தகம் ஒன்றிய அலுவலகம் செல்ல வேண்டிய அவல நிலையும் சில நேரங்களில் ஏற்படுவதாக, வேதனையுடன் கூறுகின்றனர். மேலும், தங்களது கோரிக்கைகளை ஊராட்சி செயலரிடம்  தெரிவிக்க, செல்போன் மூலமாகவோ அல்லது அவர் பணி நிமித்தமாக ஊராட்சியின் மற்ற பகுதிகளில் இருந்தால், அதையறிந்து நேரில் சென்றோ கூறவேண்டிய நிலையுள்ளது. இதனால் முதியோர், பெண்கள் என பலரும் பல்வேறு சிரமம் அடைகின்றனர்.

Tags : Mamandur , Mamandur panchayat without panchayat office
× RELATED மதுராந்தகம் ஒன்றியத்தில்...