×

சில்லி பாயிண்ட்

நீங்கள் போராட வேண்டியது....
ஐபிஎல் போட்டியில் எதிரணிகளுடன் போராடுவதை விட  ஐக்கிய அரபு அமீரகத்தில் நிலவும் வெக்கை, பனி, கடினமான பிட்ச்களுடன்தான் அதிகம் போராட வேண்டியுள்ளது. என்னதான் திட்டமிட்டு, சிறந்த வீரர்களுடன் களம் கண்டாலும் அங்குள்ள சூழலும், பிட்ச்சும் ஆட்டங்களின் போக்கையே மாற்றி விடுகின்றன. டோனி, கோஹ்லி, தினேஷ் கார்த்திக் என இந்திய கேப்டன்கள்  சேஸ் செய்வதையே விரும்புவார்கள். அதனால் நடப்பு ஐபிஎல் போட்டியிலும்  டாஸ் வென்றதும்  பந்துவீச்சை தேர்வு செய்தனர். ஆனால் இந்த சீசனில் முதலில் பேட்டிங் செய்பவர்களே அதிகம் வென்றனர்.  முக்கால்வாசிப் போட்டிகள் முடிந்த நிலையில் பல கேப்டன்கள் இப்போதெல்லாம் டாஸ் வென்றதும் பேட்டிங்கை தேர்வு செய்கிறார்கள்.

 நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் 30 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்தவர்கள் 21 போட்டிகளிலும், 2வது பேட்டிங் செய்தவர்கள் 7 போட்டிகளிலும் வென்றனர். மேலும் 2போட்டிகள் சரிநிகர் சமனில் முடிந்தன. புதன்கிழமை வரை நடந்த கடைசி 9 போட்டிகளில்  முதலில் பேட்டிங் செய்தவர்கள் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. அதே நேரத்தில் 2வது பேட்டிங் செய்தவர்கள் 7 போட்டிகளில் வென்றனர். எஞ்சிய 2போட்டிகள் சரிநிகர் சமனில் முடிவுக்கு வந்தன. அதனால் களத்தை கணிக்க முடியாமல் திணறும் கேப்டன்கள் எதிரணியை விட களத்துடன்தான் அதிகம் போராட வேண்டி உள்ளது.

கொரன்டைன் காலத்தில் பயிற்சி
அடுத்த மாதம் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா செல்கிறது.  அங்கு தலா 3டி20, ஒருநாள் போட்டித் தொடர்களிலும், 4 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுகிறது. அதில் ஒரு டெஸ்ட் இளஞ்சிவப்பு பந்துடன், பகலிரவு ஆட்டமாக நடக்க உள்ளது. இத்தனை முடிவு செய்தாலும் அட்டவணையை இருநாட்டு கிரிக்கெட் சங்கங்களும் இறுதி செய்யவில்லை. காரணம் ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு மாநிலமும் கொரோனா பரவலை தடுக்க கடுமையான விதிகளை பின்பற்றுவதுதான். கூடவே அந்த விதிகளும் மாநிலத்திற்கு மாநிலம் வேறு படுகின்றன.

ஆனாலும் தனிமைப்படுத்தும் காலம்(கொரன்டைன்) 14நாட்கள் என்பதில் மாற்றமில்லை. அந்த தனிமைப்படுத்தும் காலத்தில் இரு அணிகளும் பயிற்சி பெற அனுமதிக்க வேண்டும் என்று சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தன.  அதனை நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் ஏற்றுக் கொண்டு அனுமதி அளித்துள்ளது. அந்த மாநிலத்தில்தான் சிட்னி கிரிக்கெட் அரங்கம் உள்ளது. ஆனால் பிரிஸ்பேன் அரங்கம் இருக்கும் குயின்ஸ்லாந்து மாநிலம் தனிமைப்படுத்தும் காலத்தில்  பயிற்சிக்கு அனுமதி அளிக்க மறுத்து வருகிறது.

களத்தில் கல்யாண கோலம்
வங்கதேச கிரிக்கெட் வீராங்கனை சஞ்ஜிதா இஸ்லாம்(24).  பேட்டிங்கில் கலக்கும் சஞ்ஜிதாவுக்கு விரைவில்  கிரிக்கெட் வீரர் மியம் மொசாடீக்கை திருமணம் செய்ய உள்ளார். அதற்காக மிக வித்தியாசமாக ‘போட்டோ ஷூட்’ நடத்தியுள்ளார். பட்டு புடவை, நகைகள் என கல்யாண கோலத்துடன் களத்தில் கிரிக்கெட் மட்டையுடன் போட்டோக்கள் எடுத்து தள்ளியுள்ளார். அவற்றில் ஒன்றிரண்டை தனது  சமூக ஊடக பக்கத்தில் சஞ்ஜிதா பகிர்ந்துள்ளார். அது கிரிக்கெட் பிரபலங்கள், ரசிகர்களிடையே இப்போது வைரலாகி வருகிறது.


Tags : The prevailing heat in the UAE, rather than fighting rivals in the IPL, is snow
× RELATED 2024 ஐபிஎல் டி20: டெல்லி அணிக்கு எதிரான...