×

விஜயவாடாவின் இந்திரகீலாத்ரி மலையின் உச்சியில் உள்ள கனக துர்கா கோயில் வளர்ச்சிக்கு ரூ.70 கோடி: முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி அனுமதி

விஜயவாடா: விஜயவாடாவின் இந்திரகீலாத்ரி மலையின் உச்சியில் உள்ள கனகதுர்கா கோயிலில் முதல்வர் ஒஸ்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி சுவாமி தரிசனம் செய்தார். அப்போது, கோயில் வளர்ச்சிக்கு ரூ.70 கோடி நிதி ஒதுக்கி செய்து அறிவித்தார். ஆந்திரா மாநிலம் விஜயவாடா நகரத்தில் உள்ள இந்திரகீலாத்ரி மலையின் உச்சியில் உள்ள கனக துர்கா கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு நேற்று முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி திடீரென வருகை தந்தார். பாரம்பரிய உடையில் வந்திருந்த அவருக்கு தேவஸ்தானம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர், கோயிலுக்கு அழைத்து செல்லப்பட்டார்.

ஆலயத்தை வலம் வந்து மூலவர் சன்னதிக்கு சென்றார். அங்கு, சுவாமிக்கு, பட்டு வஸ்திரங்களை ஜெகன்மோகன் ரெட்டி வழங்கி, பக்தியுடன் தரிசனம் செய்தார். பின்னர் ஆலயத்தை சுற்றி பார்த்தார். பின்னர் ‘கனக துர்கா கோயிலின் வளர்ச்சிக்கு ரூ.70 கோடி நிதி வழங்குவதாக முதல்வர் அறிவித்தார். இந்த நிதி மலையில் இருந்து கற்பாறைகளை உருளுவதை தடுப்பதற்கான வெளிப்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்கும், சமையலறையில் ஒரு சூரிய மின் நிலையத்தை நிறுவுவதற்கும், அன்னதானம் மற்றும் கேஷா கண்டநாஷலத்தை நிர்மாணிப்பதற்கும் பயன்படுத்தப்படும் என்று ஆலய நிர்வாகிகள் கூறினர்.

Tags : YS Jagan Mohan Reddy ,Kanaka Durga Temple ,Vijayawada ,Indira Keeladri Hill , Rs 70 crore for development of Kanaka Durga temple on top of Indira Keeladri hill in Vijayawada: Chief Minister YS Jagan Mohan Reddy approves
× RELATED ஆந்திர மாநிலம் விஜயவாடாவில்...