×

கைலாசா நாட்டில் மருது சகோதரர்களுக்கு நினைவாலயம் அமைக்க வலியுறுத்தி, நித்யானந்தாவிடம் கடிதம், போஸ்டர்கள் மூலமாக கோரிக்கை

மதுரை :கைலாசா நாட்டில் மருது சகோதரர்களுக்கு நினைவாலயம் அமைக்க வலியுறுத்தி, நித்யானந்தாவிற்கு மருதிருவரின் மக்கள் களம் என்ற அமைப்பு கடிதம் மற்றும் போஸ்டர்கள் மூலமாக கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று நித்தியானந்தா, கைலாசா நாட்டின் தங்க நாணயங்களை வெளியிட்டார். அத்துடன் ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா என்ற வங்கியையும் தொடங்கி, 300 பக்கங்கள் கொண்ட பொருளாதார கொள்கையை அவர் வெளியிட்டார். கைலாசா குறித்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துவிட்டது. இதையடுத்து, மதுரையில் டெம்பிள் சிட்டி ஹோட்டல் உரிமையாளர் குமார், கைலாசாவில் ஹோட்டல் தொடங்க அனுமதி கேட்டிருந்தார். அதுமட்டுமல்ல திருச்சியில் உள்ள சாரதாஸ் துணிக் கடையும் அங்கு கடை அமைக்க கோரிக்கை விடுத்தது. மேலும் கைலாசாவில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என மதுரையில் உள்ள ஒரு விளையாட்டுக் கழகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், கைலாசா நாட்டில் மருது சகோதரர்களுக்கு நினைவாலயம் அமைக்க வலியுறுத்தி, நித்யானந்தாவிற்கு கடிதம் மற்றும் போஸ்டர்கள் மூலமாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மதுரை மாநகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், சிவகங்கையில் ஆன்மீக ஆட்சிசெய்த ஆன்மீக கொடைவள்ளல் மாமன்னர் மருது சித்தர்களுக்கு 219-வது அரசு மற்றும் ஆன்மிக திருவிழா நடைபெற உள்ளதாகவும், இதனையொட்டி, கைலாசா நாட்டில் மாமன்னர் மருது சித்தர்களுக்கு நினைவாலயம் அமைக்க அனுமதி வேண்டும் என தமிழ் சமூகத்தின் சார்பில் நித்யானந்தாவிற்கு வேண்டுகோள் விடுப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நித்யானந்தாவிற்கு கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Nithyananda ,memorial ,brothers ,country ,Kailasa , Kailasa, Medicine Brothers, Memorial, Nityananda, Letter, Posters
× RELATED 14 பசுக்கள், 12 எருமைகளுடன் ஒன்றிய...