×

பெரம்பலூர் அருகே குன்னத்தில் ஆனைவாரி ஓடையில் கல்மர படிமம் கண்டுபிடிப்பு

பெரம்பலூர்: 80 ஆண்டுகளுக்குப் பிறகு பெரம்பலூர் அருகே 12 கோடி ஆண்டு பழமையான 4வது கல்மரப் படிமம் குன்னம் ஆனைவாரி ஓடையில் கண்டெடுக்கப்பட்டது. இது 7 அடி நீளம் உள்ளது. வரலாற்றுப் பெருமைக்கு வால்கொண்டா போரையும், சிலப்பதிகாரத் தொடர்புக்கு சிறுவாச்சூர் கோவிலையும், வேலைப்பாடு அழகிற்கு வெங்கனூர் கோவிலையும், பவுத்த மதப் பர வலுக்குப் பரவாய் புத்தரையும் பெருமைகளாய்ப் பேசுகிற பெரம்பலூர் மாவட்டம், பவுதிகப் பழமைக்கு சாட்சியாகக் காட்டுவது சாத்தனூர் கல்மரத்தைத்தான். பூமியின் ஆரம்பகால மீசாசோயிக் யுகத்தில், கிரிடேஷியஸ் காலத்திலிருந்த பூக்கா த தாவர வகை மரம் தான் சாத்தனூர் கிராமத்தில் முத ன் முதலாக கல்மரமாகக் கண்டெடுக்கப்பட்டது.

அரியலூர் பகுதியில் இந்திய புவியியல் ஆய்வுத்துறைக்குத் தலைமை ஏற்ற முதல் இந்தியரான எம்.எஸ்.கிருஷ்ணன் என்பவர் 1940ம் ஆண்டில் ஆய்வு மேற்கொண்டபோது, பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுக்காவில் உள்ள சாத்தனூர் என்ற கிராமத்தில் ஓடைப் படுகை ஒன்றில், 18 மீட்டர் நீளம் உள்ள கல்லாகிப் போன மரம் ஒன்றைக் கண்டுபிடித்தார். சாத்தனூர் அருகே சில மீட்டர் நீளமுள்ள கல்மரங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் சாத்த னூரிலுள்ள 18 மீட்டர் நீள கல்மரம்தான் இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மிக நீளமான, ஆசியாவின் மிகப் பெரிய கல்மரப் படிமம்.

இதுதற்போது இந்திய புவியியல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. சாத்தனூர் அருகே ஆணைப்பாடி ஓடைப்படு கையில் காணப்படும் அமோநைட் (நத்தை) எனப்படும் கடல்வாழ் உயிரினத்தின் தொல்லுயிர் எச்சங்கள் சுமார் 12 கோடி ஆண்டுகளுக்குமுற்பட்ட கிரிடேஷியஸ் காலத்தைச் சேர்ந்தவை. எனவே இந்தபகுதி சுமார் 12 கோடி ஆண்டுகளுக்குமுன் கடலின்கீழ் இருந்தது உறுதியாகிறது. இந்நிலையில் 80 ஆண்டுகளுக்குப் பிறகு சாத்தனூர் கல்மரத்திற்கு அருகே குடிக்காடு கிராமத்திலிருந்து தெற்கே கொளக்காநத்தம் செல்லும் சாலையில் இன்னொரு கல்மரப்படிமம் ஜூன் மாதம் 17ம் தேதி முருகேசன-சரிதா தம்பதியின் வயல் ஓரத்தில் 95 செ.மீ நீளமும், 44 செமீ சுற்றளவும் கொண்டதாக கண்டெடுக்கப்பட்டது. பிறகு, கரம்பியம், குன்னம் என கடந்த 4 மாதங்களில் 3 புதிய கல்மரங்கள் கிடைத்திருக்கும் நிலையில் நேற்று 4வதாக குன்னத்தில் மற்றுமொரு கல்மரப் படிவம் கண்டறியப்பட்டது அப்பகுதித் தொன்மையை அறுதியிட்டுக் காட்டிவருகிறது.

குன்னம் கிராம வடக்கேயுள்ள ஆனைவாரிஓடை வரகூர், குளப்பாடி வழியாக ஓடுகிறது. இந்த ஓடையில் நடுப்பகுதியில் பாறைகளுக்கிடையே புதைந்த நிலையில் ஒரு கல்மரம் இருப்பது நேற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் கல்மரம் 7 அடி நீளமுள்ளது. இந்த ஓடையில் 20அடிஅகலத்தில் அது இரு ந்திருக்கவேண்டும். கால மாற்றத்தில் மீதி 13அடி மரமானது சிதைந்து போயிருக்கவேண்டும். இந்த 13 அடி கல்மரம் அந்தப்பாறையில் புதைந்து இருந்ததற்கான தடயங்கள் இருக்கிறது. இக் கல்மரத்தை சாத்தநத்தம் ஊரைச் சேர்ந்த ரத்தின வேல் தெரியப்படுத்தினார். சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் ரமேஷ் கருப்பையா குன்னம் ஆனந்த், பிரபு ஆகியோ ருடன் சென்று களஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் இந்த ஓடை முழுவதும் பல்வேறு கடல்வாழ் தொல்லுயிர்களான கிளிஞ்சல்கள் புதைந்துள்ளது தெரியவருகிறது. சில பாறைகளில் மரத்துண்டுகள் பதிந்துள்ள அடையாளமும் உள்ளதால் குன்னம்ஆனை வாரிஓடை பல்வேறு கடல் வாழ் உயிரினங்களின் கருவூலமாகத் திகழ்கிறது. குன்னம் பெரியஏரியில் அம்மோனைட் எனப்படும் கடல்வாழ் நத்தைகளின் படிமங்களும் சிதைந்த நிலையில் காணக்கிடைக்கிறது. மதிப்பிட முடியாத பொக்கிஷமான புவியின் தொன்மை ஆதாரங்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் மனதுவைத்து கண்டெடுக்கப்பட்ட அனைத்து கல்மரப் படிமங்களையும் சாத்தனூரில் சேகரித்து கல்மரப் பூங்காவில் அதனை கண்டெடுக்கப்பட்ட இடத்தையும் தேதியையும் குறித்து காட்சிப்படுத்த முன்வரவேண்டும்.

Tags : stream ,Perambalur ,Kunnath , Stone fossil, invention
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்