×

கரூர் சுக்காலியூர் பைபாஸ் சாலை சந்திப்பில் உடைந்த வழிகாட்டி பலகையால் வாகன ஓட்டிகள் கடும் திணறல்

கரூர்: கரூர் சுக்காலியூர் ரவுண்டானா அருகே, மதுரை, சேலம், கோவை, திண்டுக்கல் போன்ற பகுதிகளுக்கு செல்லும் சாலை பிரிகிறது. நகரின் முக்கிய சந்திப்பு சாலைப்பகுதியாக சுக்காலியூர் பகுதி உள்ளது. இந்நிலையில் திருச்சி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கரூர் சுக்காலியூர் வரும் வாகனங்களுக்கு, எந்தெந்த பகுதிக்கு எந்த பகுதியின் வழியாக செல்ல வேண்டும் என்பதை அறிவிக்கும் வகையில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் வழிகாட்டி பலகை வைக்கப்பட்டுள்ளது.

அந்த வழிகாட்டி பலகை கடந்த சில மாதங்களாக உடைந்த நிலையில் உள்ளது. இதனால் கன்னியாகுமரி, திண்டுக்கல், சேலம், கோயம்புத்தூர் போன்ற பகுதிகளின் பெயர்களும், அந்த ஊர்களுக்கு எத்தனை கிமீ தூரம் செல்ல வேண்டும் என்பன போன்ற விளக்கங்கள் கொண்ட வழிகாட்டி பலகை சிதைந்த நிலையில் உள்ளது. எனவே இந்த சாலையின் வழியாக புதிதாக வரும் அனைத்து தரப்பினர்களும் கடும் அவதிப்பட்டு வருவதோடு, வாகனங்களை நிறுத்தி விசாரித்து விட்டு பின்னர் செல்லும் நிலையில் பொதுமக்கள் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் முக்கியமான சாலை சந்திப்பு பகுதியில் உள்ள இந்த வழிகாட்டி பலகையை விரைந்து சரி செய்ய தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Motorists ,bypass road junction ,Karur-Sukkaliyur , Signboard, motorists
× RELATED கரூர் சுக்காலியூர் பாசன வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும்