×

மராட்டிய மாநிலத்துக்குள் சிபிஐ அனுமதியின்றி நுழைய தடை.: பொது இசைவு அனுமதி ரத்து என உத்தவ் தாக்கரே அறிவிப்பு

மும்பை: மராட்டிய மாநிலத்துக்குள் நுழைந்து வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு சிபிஐ-க்கு வழங்கப்பட்டு வந்த அனுமதி திரும்பப்பெறுவதாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். உத்தவ் தாக்கரேவின் இந்த அறிவிப்பால் இனி சிபிஐ அதிகாரிகள் தன்னிச்சையாக நுழைந்து எந்த வழக்குகள் தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ள முடியாது.

மும்பை உள்ளிட்ட இடங்களில் சில தொலைக்காட்சிகள் செய்த TRP மோசடி தொடர்பான வழக்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள காவல் நிலையம் விசாரணை மேற்கொண்டது. ஆனால் வழக்கை திடீரென உத்தரப் பிரதேச காவல்துறை சிபிஐ-க்கு தொடுத்துள்ளது.  இதனைத்தொடர்ந்து மராட்டியத்தில் சிபிஐ-யின் தன்னிச்சை விசாரணைக்கு  உத்தவ் தாக்கரே தடை விதித்துள்ளார்.

மும்பையில் நடிகர் சுஷாந்த் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த சூழலில் தடை உத்தரவை முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பிறப்பித்துள்ளார். ஏற்கனவே ராஜஸ்தான், மேற்குவங்க மாநிலங்கள் சிபிஐ-க்கு வழங்கிவந்த பொது இசைவை திரும்பப்பெற்றது குறிப்பிடத்தக்கது.


Tags : state ,Maratha ,cancellation ,CBI ,Uttam Thackeray , Uttam Thackeray announces ban on entry into Maratha state without CBI permission
× RELATED 20 ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் இல்லை;...