×

ஆனந்தூர் ரோட்டில் மாற்றுப்பாதை அமைக்காததால் அல்லல் படும் வாகன ஓட்டிகள்

ஆர்.எஸ்.மங்கலம்: திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை மேல்பனையூர் விலக்கில் இருந்து ஆனந்தூர் செல்லும் சாலை கல்வெட்டு பாலம் அமைத்தல் மற்றும் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. சரியான மாற்று பாதை அமைத்து கொடுக்காமல் வாகன ஒட்டிகள் அல்லல்பட்டு வருகின்றனர். திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மேல்பனையூர் விலக்கில் இருந்து கூடலுார், ஆய்ங்குடி வழியாக ஆனந்தூர் செல்வதற்கு ரோடு வசதி உள்ளது. இந்த ரோட்டின் மூலம் அப்பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட விவசாய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இச்சாலை சேதமடைந்தை தொடர்ந்து தற்போது புதிதாக கல்வெட்டு பாலம் மற்றும் சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ரோட்டின் குறுக்கே ஆயங்குடி, கூடலுார் உட்பட பல இடங்களில் பாலம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகின்றன. பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வரும் பகுதியில், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமமின்றி செல்லும் வகையில், முறையாக மாற்று பாதை அமைக்கப்படாமல் உள்ளது.  இதனால் லேசான மழை பெய்ததும் பெயரளவில் அமைக்கப்பட்ட மாற்றுப்பாதை சேறும் சகதியுமாக மாறி அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே இனி வரும் காலம் மழை காலம் என்பதால் சம்மந்தபட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் சரியான மாற்றுப்பாதையை சீர்செய்து தர வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags : Motorists ,Anandur Road , Diversion, Anandur
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...