×

காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம் மூலம் வறட்சி மாவட்டமான புதுக்கோட்டை பசுமையான பூமியாக மாறுவது உறுதி : முதல்வர் பழனிசாமி பேச்சு

இலுப்பூர், - புதுக்கோட்டையில் காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படுவது உறுதி. விரைவில் நானே நேரில் வந்து அடிக்கல் நாட்டுவேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.
தமிழக முதல்வர் பழனிசாமி மாவட்டந்தோறும் சென்று கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்து வருகிறார். இனாம்குளத்தூர் பிரிவு சாலை ரவுண்டானாவில் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு காளையை வீரர் ஒருவர் அடக்குவது போன்று அமைக்கப்பட்டுள்ள உலோக சிலையை முதல்வர் திறந்து வைத்து பேசியதாவது:

தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக தத்ரூபமாக வீரர் காளையை அடக்குவது போன்று ஜல்லிக்கட்டு சிலை அமைக்கப்பட்டுள்ளது பெருமையாக உள்ளது. இந்த மண் வீரம் நிறைந்த மண். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி அதிகம் நடைபெறும் மாவட்டம் புதுக்கோட்டை. இது வீரர்கள் பிறந்த மண். இதனால் இந்த மண்ணுக்கு வலிமை அதிகமாக உள்ளது.

இதேபோல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் நிறைந்த மண். புதுகை மக்களின் நீண்ட நாள் கனவு திட்டமான காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும். இதனால் வறட்சி மாவட்டமான புதுக்கோட்டை வளம்பெற்ற மாவட்டமாவது உறுதி. இத்திட்டத்துக்கு தற்போது நில ஆர்ஜிதம் செய்யப்பட்டு வருகிறது. துரித நடவடிக்கை எடுத்து விரைவில் இத்திட்டத்துக்கு நானே நேரடியாக வந்து அடிக்கல் நாட்டுவேன். இது பசுமை நிறைந்த பூமியாக மாறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Pudukottai ,Palanisamy ,land ,speech ,Cauvery-Gundaru , Cauvery, Gundaru, Link, Project, Pudukottai, Chief Minister Palanisamy, Speech
× RELATED புதுக்கோட்டையில் சுட்டெரிக்கும்...