×

DOG கஃபே!

நன்றி குங்குமம்

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகளில் நாய்களுக்கான ஸ்பெஷல் கஃபேக்கள் வெகு பிரபலம். குளிப்பாட்டுவது, முடி வெட்டுதல் என நாய்களுக்கான அனைத்து அம்சங்களும் ஒரே கூரையின் கீழ் இருக்கும் இடம் இது. அத்துடன் செல்லக்குட்டிகளுடன் பொழுதைக் கழிக்க விரும்பும் எஜமானர்களின் புகலிடமாகவும் இந்த கஃபேக்கள் ஜொலிக்கின்றன. விஷயம் இதுவல்ல. சவுதி அரேபியாவில் முதல் முறையாக கடற்கரை நகரமான கோபரில் நாய்களுக்கான கஃபே ஒன்று திறக்கப்பட்டு அப்ளாஸை அள்ளி வருகிறது. சவுதியில் நாய்களுக்கு தனி விதிகளே இருக்கின்றன. அங்கே சுகாதாரமற்ற ஒரு விலங்காக நாய் கருதப்படுகிறது. பொது இடங்களுக்கு நாய்களை அழைத்துவர தடை. வீட்டுக்குள்ளேயே நாய்களை வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்நிலையில் தலால் அகமது என்ற பெண் பல கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இந்த கஃபேயைத் திறந்திருக்கிறார். நாய்க்குட்டிகளுடன் அதிகளவில் பெண்கள் இந்த கஃபேக்குப் படையெடுக்கின்றனர். சில நாட்களுக்கு முன் தனது செல்ல நாயுடன் கடற்கரையில் நடைப்பயணம் போயிருக்கிறார் தலால். இங்கெல்லாம் நாயை அழைத்துவரக் கூடாது என்று காவல்துறையினர் சொல்ல, கடுப்பாகிய தலால் சொந்தமாகவே ஒரு நாய் கஃபேயைத் திறந்துவிட்டார்!     
தொகுப்பு: த.சக்திவேல்


Tags : DOG Cafe , DOG Cafe!
× RELATED ஒமேகா-3 இல் கொட்டிக்கிடக்கும் அதிசயங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்