×

உலகின் மிகப்பெரிய ரோபோ!

நன்றி குங்குமம்

தொழில்நுட்பத்தில் மீண்டும் ஒரு பாய்ச்சலை நிகழ்த்தி, டெக் உலகில் தங்களை யாராலும் மிஞ்ச முடியாது என்று நிரூபித்துள்ளது ஜப்பான். மனித உருவில் உள்ள ஒரு ராட்சத கற்பனை ரோபோ குண்டம். எண்பதுகளில் இது வெகு பிரபலம். கற்பனையாக மட்டுமே இருந்த இந்த ரோபோவை நிஜமாகவே கொண்டு வந்துவிட்டார்கள் ஜப்பானியர்கள். 60 அடி உயரமும் 25 டன் எடையும் கொண்ட இந்த ரோபோவின் பெயர் ஆர் எக்ஸ் - 78. மனிதத் தோற்றத்தில் உள்ள, உலகின் மிகப்பெரிய ரோபோ இதுதான்.

இவ்வளவு எடை, உயரம் இருந்தாலுமே கூட இதன் கை, கால்களை சுலபமாக அசைக்க முடிகிறது. கண் இமைக்கும் நேரத்தில் குனிந்து மேலே எழுகிறது. இதன் செயல்பாடுகளை வீடியோவாக்கி டுவிட்டரில் தட்டிவிட, 50 லட்சம் பேர் பார்த்து வைரலாக்கிவிட்டனர். இப்போது சோதனை ஓட்டத்தில் இருக்கும் ஆர் எக்ஸ் - 78 இந்த ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு வரும். அதன் பயன்பாடு என்னவென்பதை ரகசியமாக வைத்திருக்கிறார்கள்.

தொகுப்பு: த.சக்திவேல்

Tags : world , The world's largest robot!
× RELATED சில்லி பாயின்ட்…