×

தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக விராலிமலையில் நிறுவப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு சிலையை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி!!

புதுக்கோட்டை, : புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நிறுவப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு சிலையை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். தமிழக முதல்வர் பழனிசாமி மாவட்டந்தோறும் சென்று கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்து வருகிறார். அதன்படி முதல்வர் பழனிசாமி இன்று புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வருகை தந்தார். இன்று காலை சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்ட முதல்வர் பழனிசாமி காலை 8.30 மணிக்கு திருச்சி விமானம் நிலையம் வந்தார். முதல்வருடன் சட்டம்-ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ் உடன் வந்தார். விமான நிலையத்தில் முதல்வருக்கு அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், காமராஜ், விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், கலெக்டர் சிவராசு மற்றும் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து, அங்கிருந்து காரில் புறப்பட்ட முதல்வர் பழனிசாமி விராலிமலை சென்றார். பூதக்குடி டோல்பிளாசாவில் முதல்வருக்கு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர். 10.30 மணிக்கு விராலிமலையில் தனியார் நிறுவனமான ஐ.டி.சி நிறுவனத்திற்கு சென்று அங்கு புதிய யூனிட் திறப்பு திட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.

பின்னர், அங்கிருந்து புறப்பட்ட முதல்வர் 11.15 மணிக்கு இனாம்குளத்தூர் பிரிவு சாலை ரவுண்டானாவில் ஜல்லிக்கட்டு காளையை வீரர் ஒருவர் அடக்குவது போன்று அமைக்கப்பட்டுள்ள உலோக சிலையை முதல்வர் திறந்து வைத்தார். தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக விராலிமலையில் ஜல்லிக்கட்டு சிலை நிறுவப்பட்டுள்ளது.

Tags : Palanisamy ,Viralimalai ,Tamils , Viralimalai, Jallikattu statue, unveiled, Chief Palanisamy
× RELATED விராலிமலை ஊராட்சிக்கு இறந்தவர்களின்...