×

சேலம் விமான நிலையத்தில் விமான போக்குவரத்து சேவை நேரம் மாற்றம்

சேலம்: சேலம் விமான நிலையத்தில் விமான போக்குவரத்து சேவை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தனியார் ட்ரூஜெட் போக்குவரத்து மேலாளர் அறிவித்துள்ளார். சென்னையிலிருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு சேலத்திற்கு 8.15 மணிக்கு விமானம் வந்தடையும். சேலத்தில் இருந்து 8.35 மணிக்கு புறப்படும் விமானம் சென்னைக்கு 9.35 மணிக்கு வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களால் நவம்பர் மாதம் வரை செவ்வாய், புதன் கிழமைகளில் சென்னை-சேலம் இரு மார்க்கங்களிலும் விமானம் இயக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : Salem Airport , Change of air service time at Salem Airport
× RELATED சேலம் சென்றடைந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்