×

18 பேர் வேலையை 3 பேர் செய்றோம்...அடிக்கடி மின்தடையா அமைச்சரிடம் பேசுங்க : ஊழியர் பற்றாக்குறையை நுகர்வோரிடம் சுட்டிக் காட்டிய பொறியாளர் இடமாற்றம்

பரமக்குடி: பரமக்குடி அருகே துணை மின் நிலையத்தில் ஊழியர் பற்றாக்குறையை சுட்டிக் காட்டியவர் இடமாற்றம் செய்யப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உரப்புளி, கள்ளிக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் முன்னறிவிப்பு இல்லாமல் அடிக்கடி மின்சாரம் தடை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தும், மின்தடை தொடர்ந்தது. உரப்புளி கிராமத்தில் நேற்று நீண்டநேரம் மின்வெட்டு இருந்ததால், நாகராஜன் என்பவர் சத்திரக்குடி மின்வாரிய பொறியாளர் ரவியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மின்சாரம் இல்லாததை தெரிவித்துள்ளார்.

அப்போது, மின்வாரிய பொறியாளர், ‘‘அலுவலகத்தில் ஆள் பற்றாக்குறை உள்ளது. 18 பேர் வேலை செய்யக்கூடிய இடத்தில், மூன்று பேர் மட்டுமே இருக்கிறோம். அதனால் தான் மின்தடையை சரி செய்ய தாமதம் ஏற்படுகிறது. ஆள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அமைச்சரிடம் பேசுங்க...’’ என்று பதிலளித்துள்ளார். இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்த நிலையில், பரமக்குடி அருகே துணை மின் நிலையத்தில் ஊழியர் பற்றாக்குறையை சுட்டிக் காட்டியவர் இடமாற்றம் செய்யப்பட்டார். சத்திரக்குடி துணை மின் நிலையத்தில் பணிபுரிந்து வந்த பொறியாளர் ரவி நீலகிரி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார்.

Tags : Minister of Frequency Resistance ,consumers , Resistor, Minister, Staff Shortage, Engineer, Relocation
× RELATED கொப்பியம் கிராமத்தில் நுகர்வோரை...