×

தமிழகத்தில் இன்று முதல் இரவு 10 மணிவரை கடைகளை திறக்க வியாபாரிகளுக்கு அனுமதி

சென்னை : தமிழகத்தில் இன்று முதல் இரவு 10 மணிவரை கடைகளை திறந்து வியாபாரம் செய்ய வியாபாரிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு கடைகள் திறப்பு நேரம் இரவு 9 மணிக்கு பதிலாக இரவு 10 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காய்கறி, டீ, மளிகை உள்ளிட்ட அனைத்து கடைகள், உணவகங்கள்,வணிக வளாகங்களுக்கும் நேரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.நோய் தொற்று கட்டுப்பாடு பகுதிகள் தவிர மற்ற பகுதியில் இரவு 10 மணிவரை கடைகள் இயங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலங்களில் கடைகள், பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

Tags : Traders ,shops ,Tamil Nadu , Tamil Nadu, Shops, Merchants, Permission
× RELATED இரவு 11.30 மணி வரை கடைகள் திறக்க அனுமதிக்க...