×

திருமலாவின் குறைந்த விலை சூப்பர் பால் அறிமுகம்

சென்னை: திருமலா பால் நிறுவனத்தின் புதிய பால் வகை அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. ரூ.15ல் புத்தம் புதிய சூப்பர் பால் என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. பிரத்யேகமாக தயாரிக்கப்படும் இந்த தரமான பால் 400 மிலி அளவில் ரூ.15க்கு விற்பனைக்கு வர உள்ளது. கொரோனா கால கட்டத்தில் பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நியாயமான விலையில் பால்பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் நோக்கில் அறிமுகம் செய்துள்ளதால் அனைவரும் பயனுடையதாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.


Tags : Thirumala , Introducing Thirumala's low cost super milk
× RELATED திருச்சானூரில் கார்த்திகை...