×

டாக்டரின் வங்கி கணக்கில் இருந்து பப்ஜி கேம் விளையாட ரூ.6.5 லட்சம் திருட்டு: சிறுவனிடம் விசாரணை

சென்னை: அண்ணாநகரை சேர்ந்தவர் முருகேசன்(75). டாக்டர். இவர், வீட்டில் தனியாக வசிக்கிறார். இவரது பிள்ளைகள் வெளியூர்களில் உள்ளனர். இதனால் தன்னை பராமரிக்க வீட்டின் மாடியில் அண்ணாநகரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு வாடகைக்கு விட்டுள்ளார். அந்த பெண் அங்கு தங்கியபடியே முருகேசனுக்கு தேவையான உணவு மற்றும் மருத்துவ உதவி செய்து பராமரித்து வருகிறார். இந்நிலையில், முருகேசன்  கடந்த சில தினங்களுக்கு முன்பு அண்ணாநகர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது வங்கி கணக்கில் இருந்து திடீர் திடீரென பணம் மாயமானதாக தெரிவித்தார்.

இதுகுறித்து அண்ணாநகர் துணை கமிஷனர் ஜவகர் தலைமையில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், வீட்டில் பணிபுரியும் பெண் மற்றும் அவரது மகனிடன் விசாரணை செய்ய வேண்டும் என்று போலீசார் கேட்டபோது முருகேசனின் உறவினர்கள் “அவர்களிடம் விசாரணை செய்ய வேண்டாம்” என்று கூறினர். இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், முருகேசன் தனக்கு வேண்டிய பொருட்களை வாங்கி வருவதற்காக வீட்டில் தங்கி பணிபுரியும் பெண்ணின் 16 வயதுடைய மகனின் செல்போனில் தனது வங்கி கணக்கு குறித்த தகவல்களை பதிவு செய்துள்ளார். அதன் ரகசிய எண்ணை தெரிந்து கொண்ட அந்த சிறுவன் இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பப்ஜி கேம் விளையாட ரூ.6.5 லட்சம் வரை செலவு செய்திருப்பது தெரியவந்தது. நம்பிக்கையின்பேரில் வங்கி கணக்கை கொடுத்ததால் பப்ஜி விளையாட்டிற்காக ரூ.6.5 லட்சம் வரை எடுத்தது தெரியவந்தது. சிறுவனிடம் இருந்து 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

Tags : doctor , Rs 6.5 lakh stolen from doctor's bank account to play Babji game: Boy interrogated
× RELATED மதுரையில் மருத்துவம் படிக்காமல்...