பொதட்டூர்பேட்டையில் பேரூராட்சிக்குரிய கடையை ஏலம் எடுக்க போட்டா போட்டி

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அடுத்த பொதட்டூபேட்டை பேரூராட்சிக்கு சொந்தமான பேருந்து நிலையத்தில் உள்ள கடை எண். 13 பொது ஏலம் நேற்று நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் முனுசாமி தலைமையில் நடைபெற்ற ஏலத்தில்  பக்கேற்க 14 பேர் முன்பணம் செலுத்தி கலந்து கொண்டனர். கடையை ஏலத்தில் எடுக்க பங்கேற்றவர்களிடையே ஏற்பட்ட போட்டப்போட்டி காரணமாக சிறிய கடைக்கு மாத வாடகைகையாக ரூ.16.500 நிர்ணயிக்கப்பட்டது. இதை ராஜா என்பவர் ஏலம் எடுத்தார். பொது ஏலத்தில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் குப்பன், வரித்தண்டலர்  ஜெய்சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>