×

வேகத்தடை மீது ஏறியபோது பைக்கிலிருந்து தவறி விழுந்த இளைஞர் பலி

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் ஒண்டி குப்பத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் ஹரிஷ் (22). இவர் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு பணி முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் சென்னையிலிருந்து திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். இரவு 10.40 மணியளவில் அரண்வாயில் என்கிற இடத்தில் வேகத்தடை மீது மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கும் போது அவர் நிலை தடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.  இந்த சம்பவம் குறித்து செவ்வாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : The young man who fell off the bike while climbing on the speed limit was killed
× RELATED மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது