×

63 குண்டுகள் முழங்க காவலர் வீரவணக்கம் நாள் அனுசரிப்பு

திருவள்ளூர்: காவலர்கள் வீரவணக்க நாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள நினைவுத் தூணுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.அரவிந்தன் மலர் வளையம் வைக்க,  63 துப்பாக்கி குண்டுகள் முழங்க காவல் துறையினர் வீரவணக்கம் செலுத்தினர். கடந்த 1959 இல் லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்புப் படைப்பிரிவைச் சேர்ந்த காவலர்கள் உயிரிழந்தனர். அதேபோல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பணியின் போது 292 பேர் உயிர் நீத்தனர். இவர்களின் நினைவாக அக்டோபர் 21ம் நாளை ஒவ்வொரு ஆண்டுதோறும் காவல் துறையினர் வீரவணக்க நாளாக அனுசரித்து வருகின்றனர்.

இதையொட்டி திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக அலுவலக வளாக மைதானத்தில் வீர வணக்க நாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.அரவிந்தன் அந்த வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்ததும், காவல் துறையினர் 63 துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து வீரமரணம் அடைந்தவர்கள் விட்டுச் சென்ற பணிகளை செய்து முடிப்போம் என்று உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் சென்று பல்வேறு உதவிகளை வழங்கிய ஆயுதப்படை காவலர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை எஸ்.பி வழங்கி பாராட்டினார்.


Tags : Weerawansa , Guard Weerawansa Day adjustable to sound 63 bombs
× RELATED ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த...