×

அரசு பள்ளியில் கம்ப்யூட்டர் திருட்டு

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த வல்லூரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. வழக்கம்போல் நேற்று முன் தினம் பள்ளியை ஆசிரியர் பார்வையிட்டு பள்ளியை பூட்டுவிட்டு தலைமையாசிரியர் ஆபிரகாம் சென்றுவிட்டார். பின்னர் நேற்று காலை பள்ளிக்கு வந்து பார்த்தபோது தலைமை ஆசிரியர் போட்ட பூட்டு இல்லை வேறு ஒரு பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது. அந்தப் பூட்டை உடைத்து உள்ளே பார்த்தபோது 11 கம்ப்யூட்டர், பிரிண்டர், இன்வெர்ட்டர் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் படி  போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


Tags : government school , Computer theft in government school
× RELATED கொடைக்கானல் அரசு பள்ளி மாணவர் பல் மருத்துவத்தில் சேர்ந்தார்