×

பள்ளி மாணவன் திடீர் மாயம்

புழல்: புழல் லட்சுமி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் புஷ்பா. இவர் சென்னை வானகரத்தில் உள்ள லாரி புக்கிங் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் சாய்பிரசாத் (14). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் வீட்டிற்கு அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்று பொருட்களை வாங்கி வரச் சென்ற சாய்பிரசாத் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது தாய், உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் புழல் காவல் நிலைத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன பள்ளி மாணவனை தேடுகின்றனர்.

Tags : School student , School student sudden magic
× RELATED (தி.மலை) பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் கைது