×

காஞ்சி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டம்

மதுராந்தகம்: மதுராந்தகத்தில் காஞ்சி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. காஞ்சி தெற்கு மாவட்டம் மதுராந்தகத்தில் ஒன்றிய, நகர, பேரூர் திமுக இளைஞரணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது. காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ப.அப்துல் மாலிக் வரவேற்றார், துணை அமைப்பாளர்கள் வீ.எழிரசன், பெ.மணி, க.பால்ராஜ், அ.யுவராஜ், உ.சோபன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஜோயல், எம்பி ஜி.செல்வம், எம்எல்ஏக்கள் எழிலரசன், ஆர்.டி.அரசு, எஸ்.புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் கடந்த 17ம் தேதி வெளியிடப்பட்ட மாவட்ட, ஒன்றிய, பேரூர், இளைஞர் அணி நிர்வாகிகள் பட்டியல் கிளை நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது. மேலும் காஞ்சி தெற்கு மாவட்டத்தில் வரும் 3ம் தேதி இளைஞரணி சார்பில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அவருக்கு வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில் மதுராந்தகம் நகர செயலாளர் குமார், நகர இளைஞரணி அமைப்பாளர் ஆன்டோசிரில் ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Kanchi South District DMK Youth Advisory Meeting , Kanchi South District DMK Youth Advisory Meeting
× RELATED விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக கண்டன...