நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லூயிஸ் வெளியிட்டுள்ள அறிக்கை. செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை காலை 10.30 மணியளவில் காணொலி காட்சி முலம் கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில், மாவட்ட விவசாயிகள் பங்கேற்கும் வகையில் அனைத்து வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட விவசாயிகள், அந்தந்த வட்டாரங்களில் உள்ள வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு, இந்த கூட்டத்தில், முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>