அடுத்தடுத்து 3 வீடுகளை உடைத்து கொள்ளை

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே படப்பை அடுத்த வஞ்சுவாஞ்சேரி, கணேசபுரத்தை சேர்ந்தவர் யமுனா தேவி (45). மண்ணிவாக்கத்தில் உள்ள ஓட்டலில் வேலை செய்கிறார். இவரது கணவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.

நேற்று முன்தினம் யமுனாதேவி, வேலைக்கு சென்றார். மாலையில் வீடு திரும்பினார். அப்போது, வீட்டு கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், ரூ.14 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. மேலும், அதே பகுதியை சேர்ந்த யமுனாபாய் என்பவரது வீட்டை உடைத்து 5 சவரன் நகை, ரூ.2800, தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் தங்கியுள்ள அறையில் ரூ.5 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது. புகாரின்படி மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories:

>