×

பெண் அமைச்சர் பற்றி சர்ச்சை பேச்சு கமல்நாத்துக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

புதுடெல்லி மத்திய பிரசேதத்தில் அடுத்த மாதம் 28 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இவற்றில் வெற்றி பெறுவதற்காக பாஜ.வில் சமீபத்தில் ஆட்சியை பறிகொடுத்த காங்கிரசும், ஆட்சியை மேலும் பலப்படுத்துவதற்கான பாஜவும் துடித்துக் கொண்டிருக்கின்றன. இங்குள்ள தாப்ரா தொகுதியில் சமீபத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில், இம்மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத் பங்கேற்றார். அப்போது, பாஜ சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளரும், மாநில அமைச்சருமான இமர்தி தேவியை ‘அயிட்டம்’ என தரக்குறைவாக குறிப்பிட்டார். இது கடும் சர்ச்சையானது. இந்நிலையி்ல், இது தொடர்பாக கமல்நாத்துக்கு தேர்தல் ஆணையம் நேற்று நோட்டீஸ் அனுப்பியது. அதில், ‘தாங்கள் தேர்தல் பிரசாரத்தில் தேர்தல் நடத்தை விதிமுறையை மீறியிருப்பது தெரிகிறது. இது தொடர்பாக  48 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும். தவறினால், தேர்தல் ஆணையம் தானாக நடவடிக்கை எடுக்கும்,’ என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Tags : EC ,Kamal Nath , EC issues notice to Kamal Nath
× RELATED மதிமுகவுக்கு பம்பரம் சின்னம்...