×

சொல்லிட்டாங்க...

* மக்கள் பிரதிநிதிகளால் வழிநடத்தப்படும் மாநில அரசின் அதிகாரத்தில் ஆளுநர் தலையிட்டு தடை செய்வது அப்பட்டமான அதிகார அத்துமீறல். - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

* தமிழகத்தில் அதிமுக, பாஜ கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யும். - பாஜ மாநில தலைவர் எல்.முருகன்

* தமிழகத்தை பொறுத்தவரை வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில்தான்கூட்டணி. வேறு எந்த கட்சியும் கூட்டணிக்கு தலைமை வகிக்க முடியாது. - அமைச்சர் டி.ஜெயக்குமார்

* மருத்துவ கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஒவ்வொரு நாள் தாமதமும் பெரும் அநீதியை விளைவிக்கும். - பாமக நிறுவனர் ராமதாஸ்

Tags : Told...
× RELATED பொங்கல் கரும்பில் கூட ஸ்டிக்கர் ஒட்டி...