×

குடும்பத்தினருடன் எந்த தொடர்பும் இல்லை அலுவலக ரீதியாக மட்டும் தான் முதல்வர் பினராயுடன் தொடர்பு: சொப்னா பரபரப்பு வாக்குமூலம்

திருவனந்தபுரம்: ‘கேரள  முதல்வர் பினராய் விஜயனிடம் அலுவல் ரீதியாக மட்டுமே தொடர்பு  வைத்திருந்தேன்’ என்று சொப்னா மத்திய  அமலாக்கத்துறையிடம்  வாக்குமூலம் அளித்துள்ளார். தங்கம் கடத்தல் வழங்கில் கைது செய்யப்பட்ட சொப்னா மத்திய அமலாக்கத்துறை   அதிகாரிகளிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:  கேரள முதல்வர் பினராய் விஜயனிடம் அலுவல் ரீதியாக மட்டுமே தொடர்பு வைத்து   இருந்தேன். அவரது குடும்பத்துடன் தனிப்பட்ட முறையில் எந்த தொடர்பும் இல்லை.  ஷார்ஜா மன்னர் கேரளாவுக்கு வந்தார். அப்போது அவரை  வரவேற்பது  குறித்து தனது மனைவிக்கு சொல்லி கொடுக்க வேண்டும் என்று முதல்வர் பினராய்  விஜயன் என்னிடம் கேட்டுக்கொண்டார். இது தவிர  எனது தந்தை இறந்தபோது,  சிவசங்கரின் போனில் இருந்து என்னை அழைத்து இரங்கல் தெரிவித்தார்.

அதைத்  தொடர்ந்து அலுவல் ரீதியான காரியங்களுக்காக முதல்வரை பலமுறை தொடர்பு கொண்டு  பேசி இருக்கிறேன். அதுபோல விசா ஸ்டாம்பிங்  செய்தல் உள்பட சில தேவைகளுக்காக  முதல்வரின் தனிச்செயலாளர் ரவீந்திரன் என்னை பலமுறை அழைத்துள்ளார். இவ்வாறு  ெசாப்னா  தெரிவித்துள்ளார். இதேபோல் துபாயில் பணிபுரிந்து வரும்  கேரளாவை சேர்ந்த ஒருவரை அங்கிருந்து நாடு கடத்தி கொண்டு வர அமீரக   துணைத்தூதரின் உதவியை அமைச்சர் ஜலீல் நாடியதாகவும் சொப்னா கூறி உள்ளார்.  அந்த நபர் அமைச்சர் ஜலீலுக்கு எதிராக அவதூறாக பேசியதாக  கூறப்படுகிறது.

ஆனால் அந்த நபர் நாடு கடத்தப்பட்டாரா? என்பது  தெரியவில்லை. மத்திய அரசு அனுமதி இல்லாமல் ஒரு இந்தியரை நாடு கடத்த  முயற்சித்தது  மிக மோசமான குற்றமாக கருதப்படுகிறது. இதுகுறித்து மத்திய  உள்துறை, விசாரணை அமைப்புகள் விசாரணையை தொடங்கி உள்ளன.

தூதரகத்துக்கு வந்த 2 அமைச்சர்கள்
தங்கம் கடத்தலில் மற்றொரு முக்கிய நபரான சரித்குமார், மத்திய அமலாக்கத்துறையிடம் அளித்த வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:
அமைச்சர் ஜலீல் தனது தொகுதியில் இலவச  உணவுப்பொருட்கள் வழங்குவது தொடர்பான உதவிகளை பெற பலமுறை  தூதரகம் வந்துள்ளார். தனது  மகனின் வெளிநாட்டு வேலை தொடர்பான உதவிகளை கேட்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரனும் பலமுறை வந்து துணை தூதரை சந்தித்து  பேசியுள்ளார் என்று கூறி உள்ளார்.

இதை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் மறுத்துள்ளார். நான் அமீரக தூதரகத்துக்கு சென்றது உண்மைதான். தனிப்பட்ட தேவைகளுக்காக  செல்லவில்லை. தூதரகம் அமைந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி இருப்பதாக துணைத்தூதர் கூறியிருந்தார். அது தொடர்பாக
ஆலோசிப்பதற்காகவே சென்றேன் என்று தெரிவித்துள்ளார்.

ஒரு கிலோ தங்கத்திற்கு 1000 டாலர் கமிஷன்
கேரள தங்கம் கடத்தலில் கைதான சந்தீப் நாயர், மத்திய அமலாக்கத்துறைக்கு கைப்பட எழுதி கொடுத்த வாக்குமூலம் வருமாறு: புதிய வழியில்  தங்கத்தை கடத்த ரமீஸ்தான் ஐடியா கொடுத்தார். அப்போது தூதரக பார்சலில் தங்கத்தை கடத்தினால் பாதுகாப்பாக இருக்கும் என்று ெசாப்னா  கூறினார். அதனால்தான் தூதரக பார்சலில் தங்கத்தை கடத்தினோம். ஒரு கிலோ தங்கம் கடத்த ₹45 ஆயிரம் கமிஷனாக தருவதாக கூறினோம்.  ஆனால் சொப்னா கிலோவுக்கு 1,000 டாலர் கேட்டார். சொப்னாவுக்கு எதிராக உள்ள கிரிமினல் வழக்கு குறித்து சிவசங்கருக்கு தெரியும். இருந்தும்  விண்வெளி பூங்கா திட்டத்தில் சொப்னாவுக்கு உயர் பதவியில் வேலை வழங்கினார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chief Minister ,Sopna , No contact with family, only official contact with Chief Minister Binara: Sopna's sensational confession
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...