×

விவசாய விரோத சட்டங்களால் 2021 போராட்ட ஆண்டாக மாறும் பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை

திருத்துறைப்பூண்டி: விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் திருத்துறைப்பூண்டியில் அளித்த பேட்டி: காவிரி டெல்டா மாவட்டங்களில் தமிழக அரசு நெல் கொள்முதல் செய்வதில் தொடர்ந்து குளறுபடிகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. விவசாயிகள் அன்றாடம் அறுவடை செய்யக்கூடிய நெல்லை கொள்முதல் செய்ய மறுக்கின்றனர். கிராமங்களில் வீதிகளில் கொட்டி வைத்துள்ள நெல், மழை நீரில் அடித்துச் செல்வதைப் பார்த்து விவசாயிகள் கண்கலங்கி மனமுடைந்து நிற்கின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.உயர்மட்ட குழுவை அனுப்பி வையுங்கள் என்று வலியுறுத்தியும் இதுவரையிலும் தமிழக அரசு அனுப்பி வைக்கவில்லை.

டிசம்பர் 1ம் தேதி துவங்க இருக்கும் பிரசார பயணம் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று விவசாயிகளை ஒன்றுபடுத்த முயற்சி மேற்கொள்வோம். தமிழ்நாட்டில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் விவசாயிகளை ஒன்றிணைத்து, தேர்தலில் வேட்பாளரை நிறுத்தி களமிறங்குவோம். விவசாய விரோத சட்டங்களால் தமிழ்நாட்டில் 2021ம் ஆண்டு ஒரு போராட்ட ஆண்டாக மாறும் என நான் எச்சரிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : BR Pandian , By anti-agricultural laws, 2021 protest, B.R. Pandian, warning
× RELATED கர்நாடக அரசை கண்டித்து சென்னை மெரினா...